|
எவரேனும் Google+ இல் பொருத்தமற்ற கருத்து அல்லது இடுகையை உருவாக்கினால், நீங்கள் அதைப் புகாரளிக்கலாம்—மொபைல் சாதனத்திலிருந்தும் புகாரளிக்கலாம். தளத்தில் எது பொருத்தமானது, மேலும் எது பொருத்தமற்றது என்பதை விளக்கும் தெளிவான உள்ளடக்கக் கொள்கைகள் Google+ இல் உள்ளன, அதனால் எங்களுடைய கொள்கையை மீறும் உள்ளடக்கம் அல்லது செயல்பாட்டை நீங்கள் கண்டறிந்தால், அதை மதிப்பாய்வு செய்வதற்காக கொடியிடலாம். கொடியிடப்பட்ட உள்ளடக்கத்தை எந்த நேரத்திலும் மதிப்பாய்வு செய்து, உள்ளடக்கத்தை அகற்றுவோம், மேலும் எங்களுடைய கொள்கைகளை மீறும் பயனர்களின் கணக்குகளைக் கட்டுப்படுத்துவோம் அல்லது நிறுத்துவோம்.
|